போராடும் ஆசிரியர்களை முகநூல் பக்கத்தில் வம்பிழுக்கும் நடிகை கஸ்தூரி…

தமிழ் சினிமாவில் சர்ச்சை நடிகைகளில் ஒருவரான கஸ்தூரி சமூக வலைதளத்தில் சர்ச்சையான விடயங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். இதுநாள் வரை அரசியல்வாதிகளையும், நடிகர்களையும் வருகிறார். வந்த கஸ்தூரி தற்போது ஆசிரியர்களையும் விட்டு வைக்கவில்லை. சம வேலை சம ஊதியம் என்று கடந்த சில மாதங்களாக அரசு ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு அரசு செவி சாய்க்காத நிலையில் பலரும் இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர்களை விமர்சித்து நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்களை விட மும்மடங்கு சம்பளம், வேலைபளுவோ குறைவு. மாணவர்கள் வெற்றி குறித்த அழுத்தம் , பொறுப்பும் கவலையும் அதினும் குறைவு. செய்தாலும் செய்யாவிட்டாலும் வேலை நிரந்தரம். வேறு எங்கும் இல்லாத ஓய்வூதியம்.

அரசு விருதுகள், பயணத்தள்ளுபடி, இலவச உணவு உள்ளிட்ட சலுகைகள், அரசு செலவில் கல்வி ஆய்வு அல்லது ஆராய்ச்சி செய்ய வெளியூர் வெளிநாடு பயணம், தேர்தல் பணிக்கு வெளியூர் இப்படி அரசு கல்வித் துறையில் பணிசெய்வோருக்கு ஏராளமான வாய்ப்புக்கள் உள்ளன.

பள்ளிக்கு லீவு போட்டுவிட்டு சினிமாவில் நடித்தவர்கள் கூட உண்டு. தனியார் துறையில் நித்யகண்டம் பூர்ணாயுசு என்னும்படியாய் நாக்கு தள்ள வேலை செய்துக்கொண்டு அரசுவேலைக்காரர்களை ஏக்கத்துடன் அண்ணாந்து பார்க்கும் ஏமாளிகளுக்கு பெரிய சம்பளம், நிரந்தர வேலை, வாழ்நாள் முழுதும் ஓய்வூதியம் இதெல்லாம் கனவில் கூட கிட்டாது. அரசு ஆசிரியர்களின் கோரிக்கைகளை பார்க்கும் பொழுது பொறாமையும் ஆற்றாமையும் வருமே தவிர நியாயமென்று தோன்றுமா? பொங்கல் விடுமுறை போனசையும் வரவில் வைத்துக்கொண்டு இனியும் வேலைநிறுத்தம், போராட்டம் என்று அரசை பிணைக்கைதியாக்குவதும் மாணவர் நலனை மறப்பதும் முறையா? இதில் இன்னொன்றையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

இந்த வேலை நிறுத்தத்தில் ஆளும் கட்சி சார்பு ஊழியர் அமைப்புக்கள் ஈடுபடவில்லை. ஜாக்டோ ஜியோ ஆளும் அரசுக்கு எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்து அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறது என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது. ஒண்ணாம்கிளாஸ் வாத்தியாருக்கு Tidel Park இல் வேலை செய்யும் BE யை விட சம்பளம் அதிகம். சத்துணவுக்கும் சம்பளத்துக்கும் மிக அதிகமாக செலவு செய்வது தமிழகம்தான். வாங்கின காசுக்கு உண்மையா கற்றுக்கொடுத்தா அரசு பள்ளி தரம் எப்பிடி இருக்கணும்? கூசாம போராட்டம் மட்டும் பண்ண தோணுது. ( ஓய்வூதிய பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை).


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.