100 தடவைக்கு மேல பாத்துட்டேன் தலைவர் படத்த: பிரபல இசையமைப்பாளர்

பொங்கலுக்கு வெளியாகி மெகா ஹிட்டாகியுள்ள பேட்ட படத்தை, 100 முறைக்கும் மேல் பார்த்துவிட்டதாக, படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்த பேட்ட திரைப்படம், பொங்கலுக்கு வெளியாகி, உலகம் முழுவதும் வசூல் மழை பொழிந்து வருகிறது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், உலகம் முழுவதும் படம் மெகாஹிட்டாகி உள்ளதை தெரிவித்து சமூக வலைத்தளங்களில், நீங்கள் எத்தனை முறை பேட்ட படத்தை பார்த்தீர்கள் என ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியது.

அதற்கு ரஜினிகாந்தின் உறவினரும் அவரது தீவிர ரசிகருமான பேட்ட படத்தின் இசையமைப்பாளர் அனிருத், பதிலளித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஷூட்டிங் முடித்த படத்தின் முதல் பதிப்பில் இருந்து தற்போது வரை பதட்ட 100 முறைக்கும் மேல் பார்த்துவிட்டதாக அனிருத் அதில் கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.