போட்டியில் ஜெயிக்கப்போவது விஜய்யா! தனுஷா! முந்துவது யார்?

தமிழ் திரையுலகில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருப்பது விஜய். இவர் படங்களுக்கு வரும் ஓப்பனிங் எல்லாம் நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

ஆனால், அப்படியிருந்தும் இணையம் என்று வந்துவிட்டால் அதிலும் யு-டியூபில் சிறிய நடிகர்கள் வீடியோ பாடல்கள் கூட உச்ச நடிகர்களை ஓரங்கட்டும்.

அப்படி தனுஷின் கொலைவெறி பாடல் தான் 170 மில்லியன் ஹிட்ஸை தாண்டி தமிழ் வீடியோக்களில் முதலிடத்தில் உள்ளது.

தற்போது வீடியோ பாடல்களில் ஆளப்போறான் தமிழன் 91 மில்லியனை கடந்துள்ளது, அதே நேரத்தில் வெளிவந்த 2 வாரத்தில் ரவுடி பேபி 87 மில்லியனை தொட்டுவிட்டது.

இதனால், 100 மில்லியன் ஹிட்ஸை முதலில் தொடுவது யார் என்று இரு தரப்பு ரசிகர்களுக்கும் கடும் போட்டி தான்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.