விஸ்வாசம் பட தியேட்டர்களில் தொடரும் விபரீதங்கள்! இப்போது மரணமே நடந்துள்ளது

அஜித்தின் நடிப்பில் விஸ்வாசம் படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இருந்தாலும் விஸ்வாசம் படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு, கட் அவுட் சரிந்து விழுந்தது, இருக்கை பிடிப்பதில் கத்திக்குத்து என தியேட்டர்களில் பல விபரீதங்கள் ரிலீஸ் தேதி அன்றே நிகழ்ந்தன.

இப்போது இதன் தொடர்ச்சியாக புதுச்சேரியில் உள்ள தியேட்டர் ஒன்றில் படம் பார்த்து கொண்டிருந்த கோவையை சேர்ந்த ராஜ்குமார் என்ற ரசிகர் இடைவெளி வரை விசில் அடித்து ஜாலியாக தான் இருந்துள்ளார். ஆனால் அதன்பின் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார்.

மது குடித்திருந்த அவர் போதையில் தான் படுத்துள்ளார் என்று அவரது நண்பரும் எழுப்பவில்லை. ஆனால் படம் முடிந்த பின்பு தான் அவர் இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.