விஸ்வாசம் படம் இந்த தெலுங்கு படத்தின் காப்பியா? அத்தனை சீன்களும் அப்படியே உள்ளது

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் விஸ்வாசம் படம் இன்று கோலாகலமாக வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படம் தெலுங்கில் வெங்கடேஷ், நயன்தாரா நடிப்பில் கடந்த 2007ல் வெளியான துளசி படத்தின் காப்பி என கூறப்பட்டு வருகிறது. ஏனெனில் இரு படங்களின் மையக்கருத்தும் ஒன்றாக தான் உள்ளது.

கணவனின் வன்முறை குணத்தால் அவரை பிரிந்து மகனுடன் தனியாக வாழ்கிறாள் மனைவி. மனைவியின் கோபத்தால் தன் சொந்த மகனிடமே தான் யார் என்ற உண்மையை மறைத்து பழகுகிறார் அப்பா. பிறகு மகனுக்கு வரும் பிரச்சனையை எப்படி தீர்க்கிறார்? குடும்பத்தை எப்படி இணைக்கிறார் என்பது தான் துளசி படத்தின் கதை.

இதுதான் விஸ்வாசம் படத்தின் மையக்கருவும் கூட. தற்கால ட்ரெண்டிற்கு ஏற்றவாறு திரைக்கதையை மாற்றி படத்தை எடுத்துள்ளனர். இது பிரச்சனையை கிளப்புமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.