வாய்ப்புக்காக கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்த ஆஸ்னா ஜாவேரி!

நடிகர் சந்தானத்தால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ஆஸ்னா ஜாவேரி. இவர் சந்தானத்துக்கு ஜோடியாக ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்தப் படம் 2014ல் வெளியானது. இந்தப் படம் சந்தானத்திற்கு வெற்றிப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து 2015ல் ‘இனிமே இப்படித்தான்’ என்ற படத்தில் மீண்டும் சந்தானத்துடன் நடித்தார்.

இந்த படம் சரியாக போகவில்லை. அதையடுத்து நடிகை ஆஸ்னா நடிப்பில் 2016ல் வெளியான படம் ‘மீன் குழம்பும் மண்பானையும்’. இந்தப் படமும் சரியாக ஓடவில்லை. இந்நிலையில் 2017ம் ஆம் ஆண்டு ‘பிரம்மா.காம்’ படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் ஓரளவு நல்ல வரவேற்பைப் பெற்றது. 2018ல் ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக நடித்தார் ஆஸ்னா ஜாவேரி. இவர் நடித்த 5 படங்களுமே சரியாக போகவில்லை. இதனால் கவர்ச்சி ரூட்டில் இறங்கினார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

கடந்த ஆண்டு ஆஸ்னா ஜாவேரி நடிப்பில் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ என்ற அடல்ட் நகைச்சுவை படம் நல்ல வரவேற்றை பெற்றது. இதனால் இனி கவர்ச்சியான வேடங்களில் நடிப்பது என ஆஸ்னா ஜாவேரி முடிவு செய்துள்ளார். இனி தாரளமாக ஆஸ்னா ஜாவேரியிடம் கவர்ச்சியை எதிர்பார்க்கலாம்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.