அனைவரும் எதிர்பார்த்த சிவகார்த்திகேயனின் அடுத்த படம் டைட்டில்!

நடிகர் சிவகார்த்திகேயன் பல விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பது குறிப்பிட்டு சொல்ல வேண்டிய உண்மை. ஒரு சாதாரண டிவி நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்து நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறினார்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரின் மனங்களை கவர்ந்தவர் தற்போது அஜித், விஜய்க்கு நிகரான ஒரு நடிகராகிவிட்டார். அவர் பாடலாசிரியர், தயாரிப்பாளர், பாடகராகவும் திறமை காட்டி வருகிறார்.

அவர் தயாரிப்பில் கடந்த வருடம் வந்த கனா நல்ல வரவேற்பை பெற்றது. அவரின் மகள் ஆராதனாவும் இப்படத்தில் வாயாடி பெத்த புள்ள பாடி பிரபலமாகிவிட்டார்.

இந்நிலையில் பலருக்கும் 2018 க்காக நன்றி சொன்ன சிவகார்த்திகேயன், புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறியதோடு ராஜேஷ் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் இம்மாதம் வெளியாகவுள்ளதாக கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.