55 வயதான பிரபலத்தை திடிரென திருமணம் செய்த நடிகை லட்சுமி மேனன்

இந்தியளவில் பிரபலமான எழுத்தாளர்களில் ஒருவர் சுஹெல் சேத்.

55 வயதான இவர் 37 வயதான பிரபல பாலிவுட் நடிகையும், மாடலுமான லட்சுமி மேனனை கிறிஸ்துமஸ் தினமான நேற்று திருமணம் செய்துகொண்டார்.

ஒருவருடமாக பழகிய இவர்களது நட்பு காதலாக மாறியதையடுத்து திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

குர்கிராமில் உள்ள லட்சுமி மேனன் வீட்டில் எளிமையாக இந்த திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. திருமணத்தில் பிரபல அரசியல்வாதிகள் பிரஃபுல் படேல், அமர் சிங், ஜே பாண்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இருவருக்கும் 18 வருட வயது வித்தியாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.