பட வாய்ப்புக்காக இப்படியா..? கவர்ச்சி புகைப்படத்தை வைரலாக்கிய பிக்பாஸ் ஐஸ்வர்யா..!


நடிகர் நகுல் நடித்து கடந்த 2015 ஆண்டு வெளியான “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு கிடைத்தாலும், நடிகை ஐஸ்வர்யா தத்தாவுக்கு சொல்லி கொள்ளும் படியான பட வாய்ப்புகள் அமையவில்லை.


அதன் பின்னர் ‘பாயும் புலி’ , ‘அச்சாரம்’, ‘ஆறாது சினம்’ , உள்ளிட்ட சில படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். ஆனால் இந்த படங்கள் இவரை ஹீரோயின் அளவிற்கு உயர்த்தவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 4 ஆவது வாரத்தில் இருந்தே ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான ஐஸ்வர்யாவை, அவருடைய தோழி யாஷிகா, தோழர்கள் ஷாரிக், மகத் ஆகியோர் காப்பாற்றி வந்தனர். யாரும் எதிர்பாராத வண்ணம் இறுதி சுற்று வரை சென்று ரன்னராக வெளியேற்றப்பட்டார்.


அதன் பின்னரும் பட வாய்ப்புகள் தன் அபார்ட்மெண்ட் கதவைத்தட்டாத நிலையில், தற்போது நடிகை ஐஸ்வர்யா தத்தா மிகவும் கவர்ச்சியான உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலர், பட வாய்ப்பை பெற நடிகைகள் இது போல் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதே பழைய்ய்ய ஐடியாவைத்தான் ஐஸ்வர்யாவும் கையாள்கிறார் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!