பிரபல நடிகர் நடித்து வெற்றியாகிய படத்தின் இரண்டாம் பாகத்தில் தல நடிக்கிறாரா..?


தமிழ் சினிமாவில் இப்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படங்கள் மெர்சல், அறம்.

இந்த வாரம் கார்த்தி நடித்த தீரன் படம் வெளியாக இருக்கிறது. கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் இப்படம் புதுவித கதையாக இருக்கும் என இயக்குனர் வினோத் பல பேட்டிகளில் கூறி வருகிறார்.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் சதுரங்க வேட்டை படத்தை பற்றி பேசிய அவரிடம் இப்பட 2ம் பாகத்தில் நடிக்க அஜித்திடம் கேட்கப்பட்டதா என்று கேட்டதற்கு, இயக்குனர் வினோத் ஆமாம் நானும் கேள்வி பட்டேன், அவரிடம் சதுரங்க வேட்டை 2 படத்தில் நடிக்க கேட்டிருக்கின்றனர். அப்படி மட்டும் நடந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#