ஆர்.கே டாட்டூ எங்கே தீபிகா..? வைரலாகிய சர்ச்சை தகவலால் பரபரப்பு..!!


பாலிவுட் ரசிகர் பட்டாளமே காத்திருந்த தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் திருமணம் கடந்த நவம்பர் 15ம் தேதி நடைப்பெற்றது.

இத்தாலியில் பனிபடர்ந்த ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள லேக் கோமோ பகுதியில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங்கின் திருமணம் கொன்கனி முறைப்படியும் சிந்தி பஞ்சாபி முறைப்படியும் திருமண சடங்குகள் நடைபெற்றன.

இந்த திருமண நிகழ்வில் பங்கேற்க பாலிவுட் பிரபலங்கள் ஷாருக் கான், ஃபரா கான், அர்ஜூன் கபூர், சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

திருமணத்தை முடித்த தீபிகா – ரன்வீர் இருவரும் மும்பை திரும்பினர்.


இந்நிலையில் தங்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சிகாக இன்று பெங்களூருவிற்க்கு தீபிகா – ரன்வீர் வந்துள்ளனர்.

அப்பொழுது தீபிகாவின் பின் கழுத்தில் இருந்த ரன்வீர் கபூரின் சுருக்கம்மாகிய RK டாட்டூ நீக்கப்பட்டிருந்தன.

திருமணத்திற்க்கு முன்பு வரை RK டாட்டூவானது இருந்து தற்போது அது நீக்கப்பட்டுள்ளது.

இது தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சை செய்யப்பட்டு வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!