ஆத்தாடி.. நம்ம அமலாபாலுக்கு இவ்வளவு ரசிகர்களா..? எதற்காக தெரியுமா..?


அமலாபால் விவாகரத்துக்கு பிறகு தான் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகி வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். அவர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளியான ராட்ச‌சன் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

சமூக வலைதளங்களில் அவர் சூடான படங்களை வெளியிட்டு சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களையும், கருத்துகளையும் வெளியிட்டுவருவார்.


அதையொட்டி நாளுக்கு நாள் அவரது சமூகவலைதள ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. அந்த வகையில் தற்போது 20 லட்சம் ரசிகர்களை உருவாக்கியுள்ளார் அமலா பால். இன்ஸ்டாகிராமில் இதுகுறித்து தற்போது பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “20 லட்சம் இன்ஸ்டாகிராம் ரசிகர்களைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

எனது அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக இருந்துவரும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றி. இது தொடரட்டும். அனைவருக்கும் எனது அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!