நடிகை ஹன்சிகாவின் திருமணத்தை முடிவு செய்பவர் யார் தெரியுமா..? அட இவங்களா..!!


தமிழ் சினிமாவில் ‘குட்டி குஷ்பூ’ என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் நடிகை ஹன்சிகா சில மாதங்களுக்கு முன்புதான் தனது 27வது பிறந்தநாளை வெகு விமைர்சியாக கொண்டாடினார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை ஹன்சிகா தற்போது அவரது திருமணத்தை பற்றி அண்மையில் பேசியுள்ளார்.

தற்போது தமிழ் சினிமாவில் அவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், இதுகுறித்து ஹன்சிகா விளக்கமளிக்கையில், இனி கவர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடிக்க மாட்டேன் எனவும், தேர்ந்தெடுத்து தான் படங்களில் நடிப்பேன் என்றும், சென்ற வருடம் மட்டும் 18 படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்ததாகவும், அதில் 4 படங்களுக்கு மட்டுமே ஒப்புக்கொண்டதாகவும் கூறினார்.


மேலும், திருமணம் பற்றி பேசிய ஹன்சிகா “எனக்கு 27 வயதாகிறது. என் அம்மா தான் அனைத்தையும் கவனித்து கொள்கிறார். என் திருமணம் பற்றிய முடிவை அவரிடமே விட்டுவிடுகிறேன். எனது தாயார் சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு திருமணம் செய்துகொள்வேன்” என தெரிவித்துள்ளார்.

தற்போது நடிகை ஹன்சிகா, அதர்வாவுடன் ‘100’ படத்திலும், உதயநிதிஸ்டாலினுடன் ‘இதயம் முரளி’ படத்திலும், ‘மஹா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!