கேரளாவில் விஜய்க்கு கட் – அவுட் வைத்து அசத்திய ரசிகர்கள்..!! வைரல் புகைப்படம்..!!


நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் திரைப்படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்,முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்திற்கு ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் ரீலீஸ் ஆவதற்கு முன்பே பல பிரச்சனைகளை சந்தித்தது. பட ஆடியோ வெளியீட்டின்போது விஜய் பேசிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் சர்கார் படத்தின கதை என்னுடையது என வருண் ராஜேந்திரன் என்ற உதவி இயக்குநர் நீதிமன்றம் சென்றார். பின்னர் அது சமரசம் ஆனது. இந்தப்படம் உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது


இந்நிலையில் உலகம் முழுக்க தமிழ் சினிமா ரசிகர்கள் ஆர்வத்துடன் சர்கார் படத்தை காண காத்திருக்கிறார்கள். தீபாவளி அன்று 80 நாடுகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.தமிழ்நாட்டில் சொல்லவே வேண்டாம் விஜய் ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் .

இதனிடையே விஜயின் கேரள ரசிகர்கள் சத்தமில்லாமல் தமிழக ரசிகர்களை விஞ்சிவிட்டனர். சர்கார் படம் ரிலீஸ் ஆவதையொட்டி திருவனந்தபுரத்தில் விஜய்க்கு 164 உயரத்தில் பிரமாண்டமான கட்-அவுட் ஒன்றை வைத்து அசத்தியுள்ளனர். இது கேரள ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழக ரசிகர்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!