ஆத்தாடி… இது நம்ம சிம்புவா..? நம்பவே முடியலையே..!! வைரல் புகைப்படத்தால் ஷாக்..!!


திரிவிக்ரம் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘அத்தாரின்டிகி தாரேதி’. பவன் கல்யாண் – சமந்தா – பிரணிதா இணைந்து நடித்த அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க சிம்பு ஒப்பந்தமாகிய நிலையில், படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் இன்று துவங்கியிருக்கிறது.


படப்பிடிப்பில் கலந்து கொண்ட சிம்புவின் புதிய தோற்றம் தற்போது சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் சிம்பு ஜோடியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தமாகி உள்ளார். சமந்தா கதாபாத்திரம் தெலுங்கில் கவனம் பெற்ற நிலையில், மேகா ஆகாஷ் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!