மறைந்த கருணாநிதியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய சினிமா பிரபலங்கள்..!!


திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியின் உடலுக்கு நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். நடிகர் பிரபு, அவரின் மகன் விக்ரம் பிரபு, சகோதரர் ராம்குமார், அவரின் மகன் துஷ்யந்த் ஆகியோரும் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் பழம்பெரும் நடிகையான சரோஜா தேவியும் நேரில் அஞ்சலி செலுத்தினார். ராஜாஜி ஹாலுக்கு வந்த நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அவருக்கு துரைமுருகன் ஆறுதல் கூறினார்.

கருணாநிதியின் மறைவால் தான் அனாதையாகிவிட்டது போன்று உணர்வதாக குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!