கலைஞரின் மறைவு வரலாற்றின் முற்றுப்புள்ளி அல்ல.. ஒரு கமா தான்..!! கமல் உருக்கம்..!!


திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் நடிகர் கமல், தனது கட்சி நிர்வாகிகளுடன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை ராஜாஜி ஹாலில் மக்கள் அஞ்சலிக்காக திமுக தலைவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. பிற மாநில முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளதால், ராஜாஜி மஹாலே மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிகிறது.

அந்தவகையில், மக்கள் நீதி மய்யத் தலைவரும், நடிகருமான கமல், கருணாநிதி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், “கருணாநிதியின் மறைவு வரலாற்றின் முற்றுப்புள்ளி அல்ல, ஒரு கமா தான். உணர்வும்,இந்த சூழலும் குரலை உயர்த்த முடியாத நிலைக்கு என்னை ஆளாக்கியுள்ளது. எனக்கும், கருணாநிதிக்கும் இடையேயான உறவு எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது. நாட்டிற்கு ஒரு தலைவராக அவரை இழந்தது போக, தனிப்பட்ட முறையில் வீட்டில் ஒரு பெரியவரை இழந்த உணர்வு எனக்கிருக்கிறது. அவரது தமிழுக்கு நான் தலை வணங்குகிறேன்” என்றார்.

கமலுடன் ஸ்ரீபிரியா உள்ளிட்ட மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் பலர் கருணாநிதி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!