வைரலாகியது சண்டக்கோழி 2 படத்தின் ‘கம்பத்து பொண்ணு’ வீடியோ பாடல்..!!


லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் விஷால், மீரா ஜாஸ்மீன், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடிப்பில், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் வெளியான திரைப்படம் ‘சண்டக்கோழி’. ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி என ஒரு மசாலா படமாக உருவான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. லிங்குசாமி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் மீண்டும் விஷால் மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படத்தில், மீரா ஜாஸ்மீனுக்குப் பதிலாக நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!