அட.. எப்படி இருந்த நம்ம சிவகார்த்திகேயன் இப்படி மாறிட்டாரே..!! வைரலாகும் புகைப்படத்தால் ஷாக்..!!


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் சிவகார்த்திகேயன். அவரது நடிப்பில் சீமராஜா படம் வருகிற செப்டம்பரில் ரிலீசாக இருக்கிறது.

சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையிலும், ராஜேஷ் இயக்கத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இரு படங்களின் படப்பிடிப்பும் அடுத்தடுத்து துவங்கிய நிலையில், படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் பிசியாக இருப்பதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில், சமீபத்தில் கோர்ட் அணிந்து தாடி, மீசையுடன் தோற்றமளித்த புகைப்படம் ஒன்றை சிவகார்த்திகேயன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த நிலையில் தனது மற்றொரு கூலிங் கிளாஸ் அணிந்தபடியான மற்றொரு தோற்றத்தை சிவகார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!