தளபதியுடன் ரொமான்ஸ் செய்ய காத்திருக்கும் காஜல் அகர்வால்..!! எப்பொழுது தெரியுமா..?


நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார். தற்போது குயின் படத்தின் ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில் தமிழ் விஜய்யுடன் நடித்த மெர்சல், அஜித்துடன் நடித்த விவேகம் படங்கள் அவரின் மார்க்கெட்டை மீண்டும் உயர்த்தியது. இதனால் பல பட வாய்ப்புகள் அவரை தேடி வருகின்றன.

தற்போது கதாநாயகிகளை மையமாக வைத்து எடுக்கப்படும் கதைகளை தேர்வு செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறாராம். தெலுங்கில் இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளாராம்.

இப்படத்தில் படப்பிடிப்புகள் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!