அஜித்துடன் இணையும் காலா பட ஹீரோயின்..!! வியப்பில் ரசிகர்கள்..!!


தமிழ் சினிமாவில் ராமன் அப்துல்லா, குருபார்வை, சிம்மராசி, விரும்புகிறேன் உள்ளிட்ட படங்களில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியவர் ஈஸ்வரி ராவ். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கிய அவர், பின்பு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். கடைசியாக தனுஷ் நடித்த சுள்ளான் படத்தில் அக்கா கேரக்டரில் அசத்தினார்.

பத்து ஆண்டுகளுக்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகிய காலா படத்தில் நடித்தார். அதில் செல்வி எனும் பேரில் வெகுளியான மனைவியாக வாழ்ந்திருந்தார். ஐ லவ் யூ சொல்லு மாமா.. என ரஜினியிடம் உருகும் இடங்கள் கிளாஸ் ஆக இருந்தது. அப்படத்தில் ரஜினி, நானா படேகருக்கு பிறகு ஈஸ்வரிராவ் நடிப்பே ரசிகர்களாலும், திரைத்துறையினராலும் வெகுவாக பாராட்டப்பட்டது.

தற்போது ஈஸ்வரி ராவ்-விற்கு பிற படங்களில் நடிப்பதற்கான அழைப்பு அதிகரித்து வருகிறது. இதில் தல அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தை கமிட் ஆகியுள்ளார் ஈஸ்வரி ராவ். படத்தில் அப்பா அஜித்தின் ஜோடியாக நடிக்கிறார். மேலும் பாலாவின் அடுத்த படமான ‘வர்மா’ படத்திலும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக சுற்று வட்டாரம் தெரிவிக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியைத் தொடர்ந்து, தல அஜித்துடனும் அவர் ஜோடி சேர இருப்பதால், தமிழ் சினிமாவில் ஈஸ்வரி ராவின் ‘கம்-பேக்’ மிகவும் பிரகாசமாக அமைந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!