4 வருடத்திற்குப் பிறகு அஜித் கூட்டணியில் இணையும் பிரபல காமெடி நடிகர்..!!


விசுவாசம் நடிகர் அஜீத்தின் ‘விசுவாசம்’ படப்பிடிப்பு தற்போது தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை சிவா இயக்கி வருகிறார். இவர் அஜீத்துடன் இணையும் நான்காவது படம். இந்தப் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் படத்தில் காமெடி நடிகர்கள் ரோபோ ஷங்கர், தம்பி ராமையா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

அன்பு நண்பர் அஜீத்துடன் மீண்டும் கரம் கோர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் .


வாழ்த்திய ரசிகப் பெருமக்களுக்கு என் நன்றிகள். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வேன்.

இந்நிலையில் தற்போது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விவேக் அஜித்துடன் விசுவாசம் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. ஏற்கனவே என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துடன் விவேக் நடத்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது மீண்டும் இருவரும் கைகோர்த்துள்ளனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!