அந்த இடத்திலும் இந்த கேவலமான ஆடையா..? வைரல் புகைப்படத்தால் எதிர்ப்பு..!!


தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரு கலக்கு கலக்கிவந்த நடிகை எமி ஜாக்சன். தற்போது எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார். விளம்பர படங்களில் நடித்து கல்லா கட்டிவரும் நடிகை எமி ஜாக்சன் தற்போது அவரது சொந்த ஊரான லண்டனில் உள்ளார்.

அங்கே ஒளிபரப்பாகும் சூப்பர் கேர்ஸ் எந்த தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் எமிஜாக்சன் அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.


இந்நிலையில் அவர் நேற்று அவர் ஒரு பிகினி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியிருந்தார். அவர் அமர்ந்திருந்த இடத்தின் பின்னணியில் ஒரு மசூதி போல அரபி மொழியில் எழுத்துக்கள் இருந்தன, மேலும் பார்க்கவும் அந்த இடம் மசூதி போல இருந்தது. அதை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் எமி ஜாக்சனை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர். “அந்த இடத்திற்கு மரியாதை கொடுக்காமல் இப்படி பிகினியில் உள்ளீர்களே” என பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இறுதியில், அம்மணி இருப்பது தனது ஹோட்டல் அறையில் தான் என்பதும். வித்தியாசமான அந்த அறையை வடிவமைத்துள்ளார் என்பதும் தெரியவந்ததை தொடர்ந்து ரசிகர்கள் அமைதியாகினார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!