குப்பையில் வீசப்பட்ட காலா டிக்கெட்கள்..!! எதுக்குனு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!!


சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்க வளாகத்தில் காலா திரைப்படத்துக்கான டிக்கெட்டுகள் குப்பையில் வீசப்பட்டிருந்தது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் இன்று உலகெங்கிலும் வெளியாகியுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்க வளாகத்தில் ரோகினி , ராகினி, ரக்சினி, ருக்மணி, ரூபிணி, ஆகிய 5 திரையரங்குகளில் காலா திரையிடப்பட்டுள்ளது.


இந்நிலையில் ராகினி, ரக்சினி, ரந்தினி ஆகிய மூன்று திரையரங்குகளில் 7.15 மணிக் காட்சிக்கான டிக்கெட்டுகள் கட்டுக்கட்டாக குப்பையில் வீசப்பட்டுக் கிடந்தன.

டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்பதற்காக முன்கூட்டியே மொத்தமாக பதிவு செய்தவர்கள் கடைசி நேரத்தில் டிக்கெட்டுகளை விற்க முடியாததால் வீசிவிட்டுச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!