காலாவை விட இப்ப காவிரி தான் ரொம்ப முக்கியம்..!! ரஜினிக்கு எதிராக குரல் கொடுத்த கமல்..!!


ரஜினியின் காலா படத்தை விட மக்கள் பிரச்சனை தான் முக்கியம் என கமல்ஹாசன் கூறி இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் காலா. கபாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்தின் படத்தை இரண்டாவது முறையாக பா.ரஞ்சித் இயக்குகிறார். ஒரு கூட்டுக் குடும்பத்தின் பின்னணியில் மக்களின் பிரச்சனைக்காக போராடும் தலைவனின் கதை தான் காலா. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பர்ஸ்ட் லுக் முதல் சமீபத்தில் வெளியான வீடியோக்கள் வரை சமூக வலைத்தளத்தில் வைரல் ஹிட் அடித்துள்ளது.


இப்படம் வரும் 7ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதே வேளையில், கர்நாடகாவிற்கு எதிராக பேசிய ரஜினியின் படத்தை திரையிட விட மாட்டோம் என சில கன்னட அமைப்புகள் அறிவித்தது. இதனால் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு கெடும் என்பதால் காலாவிற்கு கர்நாடக வர்த்தக சபை தடை விதித்துள்ளது. இதனை தொடர்ந்து, படத்தை கர்நாடகாவில் வெளியிட படக்குழுவும், தமிழ் தயாரிப்பாளர் சங்கமும் முயன்று வருகிறது. பல கட்டமாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட அதற்கான தீர்வுகள் இன்னும் எட்டப்படவில்லை.

தமிழ் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், காலா படத்தின் வெளியீட்டிற்காக முதல்வர் குமாரசாமியையும் சந்திப்போம் என அறிவித்து இருந்தார். இன்னும் பட வெளியீட்டிற்கு சில நாட்களே இருக்கும் நிலையில், படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.


இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் என்னும் கட்சியை நடத்தி வரும் கமல்ஹாசன் கர்நாடக முதல்வர் குமாரசாமியை இன்று சந்தித்து பேசி இருக்கிறார். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் கமல். அப்போது அவர் பேசுகையில், காலா பற்றி கர்நாடக முதல்வரிடம் பேசுவது தேவையற்றது என நான் கருதுகிறேன். இந்த சந்திப்பில் அதுபற்றி நான் எதுவும் பேசவில்லை. என்னை கேட்டால் திரைப்படத்தைவிட மக்கள் பிரச்சனை தான் முக்கியம் எனக் குறிப்பிட்டார். நட்பாக இருந்தவர்கள், அரசியல் அறிவிப்புக்கு பிறகு எதிர் எதிராக கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!