பிரபல நடிகரை காதலிக்கும் ஸ்ரீதிவ்யா..!! அந்த அதிர்ஷ்டசாலி நடிகர் யார் தெரியுமா..?


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இவர் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ஒரு படமும் ஹிட் ஆகவில்லை. தமிழ் சினிமாவில் இருந்து ஓரம்கட்டப்பாட்டார்.

சினிமாவில் நல்ல எதிர்காலம் இவருக்கு உள்ளது என ஆருடம் கூறினார்கள் கோலிவுட் கோடாங்கிகள். ஆனால், நடந்ததோ வேறு. ஒன்றுக்கும் உதவாத துக்கடா படங்களில் நடித்து தன்னுடைய எதிர்காலத்தை பாழாக்கி கொண்டார் ஸ்ரீதிவ்யா.

தமிழ்ப்படங்களில் வாய்ப்பில்லாத நடிகைகள் என்ன செய்வார்கள். தெலுங்கு பக்கம் போவார்கள் இல்லையா..?. அதை முடிவைத்தான் அம்மணியும் எடுத்துள்ளார். ஆனால், கூடுதல் அம்சமாக அக்கட தேசத்தில் கவர்ச்சியாக நடிக்கவும் அம்மணி ரெடியாகி வருகிறார். தற்போது, ஒரு தெலுங்கு படத்தில் ஒப்பந்தமாகியுள்ள அம்மணி ஒரு பாடல் காட்சியில் படுகவர்ச்சியாக நடிக்கவுள்ளாராம்.

சமீபத்தில், வெளியான இரும்புத்திரை படத்தின் தெலுங்கு டப்பிங் பதிப்பான “அபிமன்யுடு” படத்தின் பர்மியர் ஷோவில் கலந்து கொண்ட ஸ்ரீதிவ்யா. இந்த படத்தில் இப்போது நம்மை சுற்றி நடக்கும் தொழில்நுட்ப திருட்டுகள் குறித்து கூறியுள்ளார்கள். மேலும், நடிகர் அர்ஜுனை பார்த்து காதலில் விழுந்து விட்டேன். அந்த அளவுக்கு அழகாக இருக்கிறார். அவருடைய நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!