தளபதி62 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் என்ன தெரியுமா..? வியப்பில் ரசிகர்கள்..!!


நடிகர் விஜய் – முருகதாஸ் ப்ளாக்பஸ்டர் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி வரும் திரைப்படம் “தளபதி 62”. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் 60% முடிவடைந்துள்ள நிலையில் தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என நோக்கில் சீறிப்பாய்ந்து வருகிறார் முருகதாஸ்.

ஒரு பக்கம் ஸ்பைடர் படம் கொடுத்த படுதோல்வி, மறுபக்கம் மெர்சல் என்ற ப்ளாக் பஸ்டர் படத்தை கொடுத்த ஹீரோ என தனது இயக்குனர் இமேஜை தக்க வைத்துகொள்ள கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறார் முருகதாஸ்.


இந்நிலையில், படத்தின் விஜய்யின் லுக் இது தான் என அனவைருக்கும் தெளிவாக தெரிந்து விட்டது. நரைத்த தாடியுடன் தான் இதுவரை வெளியான அனைத்து புகைப்படங்களிலும் இருக்கிறார் விஜய்.

இந்நிலையில், மேடை ஒன்றில் கோபமாக அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் முருகதாஸ். இதனை பார்த்த ரசிகர்கள் சும்மா இருப்பார்களா..? சில மணி நேரங்களில் ட்ரென்ட் செய்து கொண்டாடி தீர்த்து விட்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!