அனுஷ்காவின் காதல் ரகசியம் என்ன தெரியுமா..? அவரே சொன்ன அதிர்ச்சி பதில்..!!


திரையுலகில் ரீல் ஜோடிகள் ரியல் லைஃபிலும் இணைவது சாதரணம் தான். அந்த வகையில் பலரும் பிரபாஸ், அனுஷ்கா இருவரும் காதலிக்கின்றனர் என பல வதந்தி உலா வந்தது

விரைவில் இவர்கள் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் முதன் முறையாக ஒரு ஆங்கில நாளிதழ் ஒன்றில் பிரபாஸ் இதுக்குறித்து பேசியுள்ளார்.

இதில் ‘நான் தற்போதைக்கு திருமணம் செய்துக்கொள்ளும் எண்ணத்தில் இல்லை, இந்த செய்தி என்னுடைய பெண் ரசிகைகளுக்கு சந்தோஷத்தை கொடுத்திருக்கலாம்.


மேலும், என்னையும் ஒரு நடிகையையும்(அனுஷ்கா) இணைத்து ஒரு செய்தி வருகின்றது, அதில் உண்மை இல்லை, நான் யாரையும் காதலிக்கவில்லை, இது தான் உண்மை’ என கூறியிருந்தார் பிரபாஸ்.

இந்நிலையில், சமீபத்தில் வளைத்தளம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள அனுஷ்காவிற்கு நெருங்கிய ஒருவர் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இருவரும் தொலைபேசியில் இன்னும் பேசிக்கொண்டுதான் இருகிறார்கள். மேலும், அடிக்கடி வீடியோ கால் பேசிக்கொள்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார்கள். ஆனால், அவர்களுக்கு இருப்பது காதலா.? அல்லது வெறும் நட்பா..? என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!