தங்கல் பட நடிகைக்கு இப்படியொரு கொடிய நோயா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


அமீர்கான் தயாரித்து நடித்த தங்கல் படத்தின் நடித்தவர் நடிகை சாய்ரா வாசீம். இவரின் முதல் படம் இது தான். உலகம் முழுதும் இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை புரிந்த இந்த படத்திற்கு பல விருதுகள் மட்டும் இதில் நடித்த நடிகர், நடிகைகளுக்கும் விருதுகள் குவிந்தன.

இந்நிலையில், நடிகை சாய்ரா வாசீம் தனது நீண்ட காலமாக இருந்து வரும் நோய் குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ள தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

ஆம், அவருக்கு 12 வயதில் இருந்தே மனஅழுத்தம் (டிப்ரஷன்) நோய்க்கு ஆளாகியுள்ளார். இதனால் பல இன்னல்களை இவர் அனுபவித்துள்ளார். தற்போது 17 வயதான எனக்கு மீண்டும் அதே மனஅழுத்த நோய் வந்துள்ளது. அதனால் கொஞ்ச நாள் நடிப்புக்கு இடைவெளி கொடுப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!