தந்தை வயது நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் தமன்னா..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


நடிகை தமன்னா ஆரம்ப காலத்தில் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். 2006-ம் ஆண்டு வெளியான கேடி படத்தில் வில்லி கதாபாத்திரம் ஏற்று நடித்த அம்மணிக்கு அந்த அளவுக்கு வரவேற்ப்பு இல்லை. தொடர்ந்து 2007-ம் ஆண்டு வெளியான “கல்லூரி” திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது.

தொடர்ந்து சூர்யா, விஜய், தனுஷ், கார்த்தி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு கட கடவென முன்னணி ஹீரோயின் அந்தஸ்துக்கு வந்தார் அம்மணி. ஆனால், கடந்த இரண்டு வருடமாக அம்மணிக்கு அவ்வளவு சிறப்பான வருடங்களாக அமையவில்லை.


மலை போல நம்பியிருந்த பாகுபலி 2 படத்தில் ஐந்து நிமிட காட்சிகளில் கூட அம்மணி இடம் பெறவில்லை. இதனால், கடுமையான மனவேதனையில் இருந்தார் தமன்னா. இந்நிலையில், தன்னை விட 22 வயது அதிகமான நடிகர் ரவி தேஜாவுடன் புதிய படத்தில் ரொமான்ஸ் செய்யவுள்ளார் அம்மணி.

படவாய்ப்பு இல்லாத காரணத்தினால் தான் அம்மணி இந்த முடிவுக்கு தள்ளப்பட்டிருக்கிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!