கேரளாவிலும் சாதனையின் உச்சத்தில் மெர்சல்…!!!


தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் திரைப்படம் கேரள மண்ணில் மிகப்பெரும் வசூல் சாதனை படைத்துள்ளது.


தீபாவளி தினத்தன்று வெளியான நடிகர் விஜய்.,யின் மெர்சல் திரைப்படத்திற்கு எழுந்த எதிர்ப்புகளும், சர்ச்சைகளுமே அந்த படத்தை இந்திய அளவில் பேசவைத்ததுடன் வசூலில் சாதனை படைத்து வருகிறது.


மெர்சல் திரைப்படம் இதுவரை ரூ. 200 கோடி வரை வசூல் செய்துவிட்டதாக கூறி வருகின்றனர். இதில் கேரளாவில் மட்டும் மெர்சல் தற்போது வரை ரூ. 20 கோடி வசூல் செய்துள்ளதாம்.


இதன் மூலம் இதுவரை கேரளாவில் வந்த தமிழ் படங்களிலேயே அதிகம் வசூல் செய்தது மெர்சல் தான் என்ற பெருமையை விஜய் பெற்றுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!