65வது தேசிய திரைப்பட விருதுகளில் பிரபல இசையமைப்பாளருக்கு 2 விருதுகள்..!!


65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த தமிழ் படமாக டூலெட் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த இசையமைப்பாளராக ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் ஏ.ஆர்.ரகுமான் வென்றுள்ளார்.


காற்று வெளியிடை படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதும், மாம் படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் பெறுகிறார். அதேபோல் சிறந்த பாடகியாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் காற்று வெளியிடை படத்தில் ஒரு பாடலை பாடிய சாஷா திரிபாதிக்கு வழங்கப்படுகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி