ஜெயலலிதா இறந்த பிறகு தமிழகம் சூனியம் வைத்ததுபோல் செயற்படுகின்றது..!! சிம்பு பேட்டி


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும் திரையுலகினரின் மவுன போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை தொடங்கியது. இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், ரஜினி, கமல், விஜய், விக்ரம், கார்த்தி, சிவகுமார்.சூர்யா, சிவகார்த்திகேயன், ராஜேஷ், சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் நடிகைகளின் எண்ணிக்கை மிக குறைந்த அளவில் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது. காவல்துறையினர் மதியம் 1 மணி வரை மட்டுமே அனுமதி அளித்திருந்த நிலையில், அதுவரை மட்டுமே திரையுலகினர் அமர்ந்திருந்தனர்.

இந்த மவுன போராட்டத்தில் அஜித் குமார், பிரகாஷ் ராஜ், சிம்பு, டி.ராஜேந்தர், சரத்குமார், ராதாரவி, சேரன், வடிவேலு, தமன்னா, திரிஷா உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.

திரைத்துறை போராட்டத்தில் பங்கேற்காதது குறித்து நடிகர் சிம்பு செய்தியார்களிடம் கூறியிருப்பதாவது:


திரைத்துறையினர் நடத்திய போராட்டத்துக்கு எனக்கு அழைப்பு இல்லை. திரைத்துறையில் பல பிரச்சினைகள் உள்ள போது, காவிரி – ஸ்டெர்லைட்டுக்காக போராடுவது எனக்கு புரியவில்லை. மக்களுக்கு நீர் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை. காவிரி பிரச்சனையை வைத்து அரசியல் கட்சியினர், அரசியல் செய்து வருகின்றனர்.

காவிரிக்கான போராட்டத்திற்கு தோனி ஏதாவது ஒரு வகையில் ஆதரவு அளிக்க வேண்டும். ஐ.பி.எல் போட்டி நடந்தால் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என அப்துல் கலாம் ஆன்மா கூறியது . ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சூனியம் வைத்ததுபோல் தமிழகம் உள்ளது; தொடர்ந்து பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. ஐ.பி.எல் போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்பது நியாயமான ஒன்றுதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி