காமெடி நடிகரின் வாரிசுகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட இயக்குனர்..!! வைரல் புகைப்படம்..!!


காமெடி நடிகர் சூரி பல வருடங்களாகவே, திரைத்துறையில் இருந்தாலும், அவருக்கு பெயர் சொல்லும்படியான அறிமுகத்தைக் கொடுத்த படம் ‘வெண்ணிலா கபடி குழு’. அந்தப் படத்தின் கேரக்டர் மூலமாகத்தான் பரோட்டா சூரி எனப் பெயர் பெற்றார்.

அதன்பின் பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்திருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் விஜய் டி.வி-யில் காமெடி விருதுகள் எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.


திரைப்படம், தொலைக்காட்சிகளில் காமெடி வேடங்களில் நடிப்பவர்களை கௌரவிக்கும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் விருது பெற்றார் சூரி. அவருடன் அவரது மகன், மகள் உள்ளிட்டோரும் இந்த விழாவுக்கு வந்திருந்தனர். சூரி மகன் மற்றும் மகளோடு டைரக்டர் சுசீந்திரன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் சுசீந்திரன்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி