இனிமேல் நடிக்க மாட்டேன்..!! அதிரடி காரணம் சொன்ன நடிகையால் பரபரப்பு..!!


கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை நிவேதா தாமஸ். குழந்தை நட்சத்திரமாக பல மலையாளப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் வெளியான மை டியர் பூதம் என்ற சீரியலில் நடித்து பிரபலமான நடிகையானார். தற்போது ஹீரோயினாக நடித்துவரும் நிவேதா தாமஸ் கல்லூரியிலும் படித்து வருகிறார். சசிகுமார் இயக்கி நடித்த போராளி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.


இதையடுத்து, விஜய்யுடன் இணைந்து ஜில்லா படத்திலும் நடித்துள்ளார். கமல்ஹாசன் நடித்த பாபநாசம் படத்தில் அவருக்கு மகளாகவும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு சினிமாக்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், கல்லூரியில் செமஸ்டர் தேர்வு வருவதால், படிப்பதற்காக நடிப்புக்கு சில மாதங்கள் முழுக்கு போட்டுள்ளார். இதனை அவருடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி