ஹீரோயின்களில் பெஸ்ட் சாய்ஸ் யாருக்கு தெரியுமா..? பிரபல நடிகரின் அதிரடி பதில்..!!


சிவகார்த்திகேயன், சமந்தா நடிக்க தனது மூன்றாவது படமான ‘சீமராஜா’ -வை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் பொன்ராம். இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இவர் இயக்கிய ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ என மூன்று படங்களுமே பொன்ராம் – சிவகார்த்திகேயன் – சூரி – டி.இமான் காம்போவில் உருவாகியிருப்பது கூடுதல் சிறப்பு.

நக்கல், நையாண்டி என எல்லா வயதினரும் ரசிக்கும் வகையிலான படங்களைத் தொடர்ந்து கொடுத்து வரும் பொன்ராமிடம் ‘சீமராஜா’ படம் குறித்து கேட்டோம். அவரது ஸ்பெஷல் பேட்டி இங்கே…


சிவகார்த்திகேயன் உடன் ஹாட்ரிக்..

மூணாவது முறையா நாங்க சேர்ந்தது சந்தர்ப்ப சூழ்நிலையால் தான். ஒரே கோ-ஆர்டினேஷன்ல ஸ்க்ரிப்ட் அமையுறது.. நான் சொல்ற கான்செப்ட் அவருக்கு உடனே பிடிச்சுப்போறதுனு சில வொண்டர்ஸால மறுபடியும் முறையாக கூட்டணி அமைஞ்சிருக்கு. ரெண்டு முறை நாங்க பிளான் பண்ணி பண்ணினோம்.

இந்த நக்கல் நையாண்டி..?

சிவகார்த்திகேயன் கூட காம்பினேஷன்ங்கிறதுக்காக தான் இந்த ஸ்டைல் ஃபாலோ பண்றேன். என்னோட ஸ்டைல்ல படம் வேற மாதிரி இருக்கும். சிவா காம்பினேஷன்ல பண்றதால நக்கல் நையாண்டினு அவருக்கு ஏத்தமாதிரி பண்றேன். என்னோட வேறொரு ஸ்டைல் படம் கூடிய சீக்கிரம் வரும். சிவா – சூரியை வச்சு பண்றதால இந்தமாதிரி ஒரு ஸ்டைல்ல படம் பண்றேன். வேற ஒரு நடிகர் வேற டீம்னு வரும்போது வேற ஸ்டைல்ல படம் வரும்.


அடுத்த படம்?

அந்தப் படம் இன்னும் பிளான் பண்ணலை. இந்தப் படம் முடிஞ்சதுக்கு அப்புறம் கொஞ்சம் டைம் எடுத்து ஸ்கிரிப்ட் வேலை முடிச்சிட்டு முடிவு பண்ணனும். திரையுலக ஸ்ட்ரைக் போய்ட்டு இருக்கிறதால் வேலை அப்படியே நிக்கிது. ‘சீமராஜா’ வேலை நடக்காததால ஃப்ரீயா இருக்கிற நேரத்துல அடுத்த ஸ்கிரிப்டுக்கு வொர்க் பண்ணிக்கிட்டு இருக்கேன். இந்த மாசத்துல என்ன மாதிரியான ஜானர்னு தெரிஞ்சிடும்.’

லாரன்ஸை வைத்து படம் எடுக்கிறதா இருந்ததே?

என்னோட மூணாவது படம் லாரன்ஸ் கூட பண்றதா இருந்துச்சு. நான் சொன்ன கதை லாரன்ஸ் சாருக்கு பிடிச்சிருந்துச்சு. அடுத்த மூவ்ல சின்னச் சின்ன குழப்பங்கள் இருந்துச்சு. அப்போ, வேற படங்கள்ல அவருக்கு கால்ஷீட் நெருக்கடி வந்ததால நாம திரும்ப பண்ணிக்கலாம்னு சொல்லி பிரிஞ்சிட்டோம். அதுக்கு அப்புறம் தான் சிவ கூட பண்ற இந்தப் படத்தை ஆரம்பிச்சோம். லாரன்ஸுக்கும் எனக்கும் திரும்ப அமைஞ்சதுனா பண்ணலாம்.


ஆஸ்தான இசையமைப்பாளரா டி.இமானை ஃபிக்ஸ் பண்ணிட்டீங்களா?

இமான் சார் என்னோட முதல் படத்திலிருந்து இப்போ மூணாவது படம் வரைக்கும் சேர்ந்திருக்கார். முதல் படத்திலிருந்தே எங்களை ஒரு டீமாவே ப்ரொஜெக்ட் பண்ணிட்டோம். ஒவ்வொரு சூழ்நிலையிலேயும் எங்களோட டீம் பிரியாம இருக்கிறதுக்கான சூழல் வந்துடுது. அதுமட்டும் இல்லாம, இமான் சார் கூட நான் வொர்க் பண்றது ரொம்ப ஈஸியான வேலை. நான் என்ன சொல்லவர்றேன்னு புரிஞ்சிக்கிட்டு அவர் ட்யூன் போட்ருவார். அது செட் ஆகிடும்.

பொன்ராம் – சிவா – சூரி – டி.இமான் கூட்டணி?

நானும் டி.இமானும் கொஞ்சம் க்ளோசா இருக்கக் காரணம் என்னன்னா, நான் சொல்ற விஷயம், அவர் யோசிக்கிற விஷயம் ரெண்டும் ரொம்ப நெருக்கமா இருக்கிறதால நல்ல பாட்டு அமைஞ்சிடுதுனு சொல்லலாம். நல்ல கூட்டணி அமையும்போது அதை ஏன் விடணும். நான் – சிவா – சூரி – இமான் சார் இந்த கூட்டணியும் அப்படியே இருக்கு. ஹீரோயின்ஸ் மற்றும் படக்குழுவில் சில பேர் மட்டும் மாறியிருப்பாங்க. மத்தபடி, மூணு படமும் ஒரே டீம் கூட பண்ணினதால நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு.


சமந்தா பெர்ஃபார்மென்ஸ் எப்படி?

என் படத்தில் எப்பவுமே ஹீரோயினுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்திருப்போம். அதுலயும், சமந்தா என்னை விட திரையுலகில் அனுபவம் உள்ளவங்கங்கிறதால், இன்னும் முக்கியத்துவம் கொடுக்கிற சூழல் ஏற்பட்டிருக்கு. அதனால், அவங்களுக்கு சிலம்பம் தெரிஞ்ச ஒரு பொண்ணு கேரக்டர் கொடுத்திருக்கோம். அவங்க படத்தில் சிலம்பமும் கத்துக் கொடுப்பாங்க. சமந்தா இந்தப் படத்தில் சூப்பரா பண்ணியிருக்காங்க.

ஹீரோயின்களில் பெஸ்ட் சாய்ஸ் யார்?

ஶ்ரீதிவ்யா. ஶ்ரீதிவ்யா நான் சீன் சொன்னதுமே உடனே பிடிச்சிட்டு பண்ணிடுவாங்க. சமந்தாவோட பெர்ஃபார்மென்ஸ் ஓகே இல்லையானு கேட்கக்கூடாது. சமந்தா சீனியர். அவங்ககிட்ட ஒரு விஷயத்தை சொல்லும்போது அவங்களே அதைப் பண்ணுவாங்க. நிறைய விஷயங்களில் இது சரியில்லை வேற பண்ணலாம்னு கேட்கமுடியாது. சின்ன சின்ன மாற்றம்தான் பண்ண முடியும். ஶ்ரீதிவ்யா அப்படி கிடையாது. நாம என்ன சொல்றோமோ அதை உள்வாங்கிக்கிட்டு அப்படியே பண்ணுவாங்க. சரியா வரலைன்னா உடனே மாத்திக்குவாங்க.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி