அஜித்துடன் இணையப்போகும் இளம் இயக்குனர் யார் தெரியுமா..? அதிரடி அறிவிப்பு..!!


அஜித் தற்போது சிவாவுடன் விசுவாசம் படத்தில் இணைந்துள்ளது பலருக்கு வருத்தம், சிலருக்கு மகிழ்ச்சி என்றே சொல்லவேண்டும். ஏனெனில் விவேகம் பட விமர்சனங்களால் ரசிகர்களுக்கு வந்த அதிருப்தி தான்.

எப்போது ஷூட்டிங் ஆரம்பிக்கும் என எதிர்பார்த்த நேரத்தில் சினிமா ஸ்டிரைக் வந்து ரசிகர்களை கடுப்பாக்கியது. இந்நிலையில் அவர் அடுத்ததாக தீரன் படத்தின் இயக்குனர் வினோத்தின் படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வந்தது.

ஆனால் சம்மந்தப்பட்டவர்களால் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் இப்படம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. விசுவாசம் படப்பிடிப்பு முடிந்ததும் இந்த அறிவிப்பு வரும் என கூறியுள்ளனர்.

மேலும் இப்படம் ரசிகர்களின் ரசனைக்கேற்ப இருக்கும் என சொல்லியிருக்கிறார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி