கோரிக்கைகளை நிறைவேற்றினால் உடனடியாக ஸ்ட்ரைக் வாபஸ் வாங்கப்படும்..!! சங்கத்தலைவர் அதிரடி..!!


கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் திரையுலகினர்களின் வேலை நிறுத்தம் மிக விரைவில் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது. திரையரங்கு டிக்கெட்டுக்கள் கம்ப்யூட்டர் மயமாக்குவது உள்பட ஒருசில கோரிக்கைகளை திரையரங்கு உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டதாகவும் இதுகுறித்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை மிக விரைவில் நடைபெறும் என்றும், அதன்பின்னர் வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

தயாரிப்பாளர் சங்கத்தின் 5 முக்கிய கோரிக்கைகளை திரையரங்கு உரிமையாளர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டால், அதற்கு மறுநாளே வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும் என்று விஷால் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அந்த ஐந்து முக்கிய கோரிக்கைகள் என்ன தெரியுமா?


1.மக்களிடம் டிக்கட் கட்டணத்திற்கு மேல் அதிகமாக வாங்கும் ஆன்லைன் கட்டணத்தை குறைக்க வேண்டும் .

2.டிக்கட் கட்டணத்தை குறைத்து ஏழை , நடுத்தர , உயர்தர மக்கள் மூன்று தரப்பினரும் படம்பார்க்க டிக்கட் கட்டணத்தை முன்பு இருந்ததுபோல் முதல் வகுப்பு , இரண்டாம் வகுப்பு , மூன்றாவது வகுப்பு , என முறைபடுத்த வேண்டும்.

3.தயாரிப்பாளர்கள் முன்பு தியேட்டர்களுக்கு பிரிண்ட் தந்ததுபோல் தற்போது படத்தை மாஸ்டிரிங் செய்து கண்டன்ட் தருகிறோம் .
ப்ரொஜக்டர் வைத்து திரையிடுவது திரை அரங்க உரிமையாளர்களின் பொறுப்பு.

4.அனைத்து தியேட்டர்களிலும் கம்ப்யூட்டர் பொருத்தப்பட்டு அனைவருக்கும் உண்மையான வசூலை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் . அவ்வாறு செய்யப்படும்போது அந்த படத்தின் வசூல் உண்மையிலேயே குறைவாக இருந்தால் அதற்கு ஏற்றார்போல் நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்கள் சம்பளம் குறைக்க படவேண்டும் .


5.ஒவ்வொரு ஏரியாவிலும் சில நபர்களால் 80% தியேட்டர்கள் கையகப்படுத்தப்பட்டு தயாரிப்பாளர்களுக்கு முறையாக கிடைக்க வேண்டிய தியேட்டர்கள் தடுக்கபடுவதும் திரையிடும் தியேட்டர்களில் தரப்படும் டெபாஸிட் பணம் கொடுக்கப்படாமலும் தனிநபர்களால் செய்யப்படுகிறது.
மற்றும் வசூல் தொகையில் மிகக்குறைவான சதவீதம் பணமே ஷேர் தொகையாக அதுவும் பல மாத இழுத்தடிப்பிற்கு பிறகே தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது. அதனால் சிண்டிகேட் இல்லாமல் இனிமேல் அந்தந்த தியேட்டர் உரிமையாளர்கள்தான் நேரடியாக தயாரிப்பாளர்களுடன் படத்தை திரையிட ஒப்பந்தம் செய்ய வேண்டும் .

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி