அபிராமி ராமநாதனுக்கு ஆப்பு வைத்த தயாரிப்பாளர் சங்கம்…!! எப்படி தெரியுமா..?


தமிழக அரசின் ஆதரவாளராகவும், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்த கட்சி தலைவர்களுடன் நெருக்கமாகக் காட்டிக் கொள்வதும் அபிராமி ராமநாதன் வழக்கம்.

எப்போதும் தமிழக அரசுக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொள்வதை அடிப்படை கொள்கையாக கடைப்பிடிப்பவர் இவர். காரணம் படம் பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு பாதுகப்பின்மை குறைவாக இருக்கும் திரையரங்குகளில் சென்னை நகரில் முதலிடத்தில் இருப்பது அபிராமி மெஹா மால்.

இங்கு திரையிடப்படும் எந்த படங்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கு அட்வான்ஸ் கொடுப்பது இல்லை. ஆனால் சினிமா மேடை தோறும் சிறுபட தயாரிப்பாளர்களுக்கு தியேட்டர் நான்தான் தொடர்ந்து தருகிறேன் என கூறுவார்.

சிறுபட தயாரிப்பாளர்கள் பாதுகாக்கபட வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையில் தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தி வரும் போராட்டத்தை பிசுபிசுக்க செய்யும் வேலைகளை சில விநியோகஸ்தர்கள் செய்து வருகின்றனர்.


அவர்களுடன் இணைந்து அரவிந்தசாமி நடித்துள்ள பாஸ்கர்தி ராஸ்கல், ஜெயம் ரவி நடித்துள்ள டிக் டிக் டிக் திரைப்படங்களின் தமிழ்நாடு உரிமையை வாங்கி ரிலீஸ் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் அபிராமி ராமநாதன் என்றொரு தகவல்.

வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்த பின் அல்லது அதற்கு முன்பாக சென்னை நகரில் அபிராமி மெஹா மால் தியேட்டருக்கு புதிய படங்களை திரையிட கொடுப்பதில்லை என அதிரடியாக தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு எடுக்க இருப்பதாகத் தெரிகிறது.

இது சம்பந்தமாக சென்னை காஞ்சிபுரம் திருவள்ளுர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க ஆதரவை பெறும் முதற்கட்ட முயற்சியை தயாரிப்பாளர்கள் சங்கம் மேற்கொண்டிருப்பதாகத் தெரிகிறது

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி