ஜெய் பீம் படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் by priya | @ | May 4, 2022 8:19 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் விருதுகள் பட்டியல் வெளியான நிலையில், ஜெய்பீம் படத்திற்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன.நடிகர் சூர்யா நடிப்பில், கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கை மற்றும் உரிமைகள் பற்றி பேசும் இப்படத்தில் நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருந்தார்.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியால் பல, விருதுகளும் கிடைத்தன. இந்நிலையில் 12வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில், விருதுகள் பட்டியல் வெளியான நிலையில், ஜெய்பீம் படத்திற்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன.சிறந்த படமாக ஜெய்பீம் தேர்வு செய்யப்பட்டுள்ளது, மேலும் படத்தில் ராஜகண்ணு கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டன் சிறந்த துணை நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…