மகான் படம் இந்த ஆங்கில சீரிஸின் காப்பியா ! இணையத்தில் ரசிகர்கள் பரப்பி வரும் தகவல்..

சீயான் விக்ரம் மற்றும் அவரின் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மகான், கார்த்திக் சுபுராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

மேலும் இப்படம் நேரடியாக பிரபல OTT தளமான அமேசான் பிரைமில் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகியிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் புதிய ட்ரைலரை இன்று காலை வெளியிட்டுள்ளது படக்குழு.

இதனிடையே ரசிகர்கள் பலரும் இணையத்தில் தற்போது இப்படத்தின் ட்ரைலரை கண்டு மகான் திரைப்படம் ஆங்கில சீரிஸான Breaking Bad காப்பி என கூறிவருகின்றனர்.  
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!