விஸ்வாசம் படத்தின் திரைக்கதை தயாரிப்பு பணியில் மூழ்கியிருக்கும் இயக்குனர் சிவா. சமீபத்தில் தனது புதிய அலுவலகத்திற்கு பூஜை போட்டு முடித்துள்ளார். இந்நிலையில், அஜித்தின் புதிய தோற்றம் சமூக வளைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது
கடந்த வாரம், கோயில் ஒன்றிக்கு பூஜை தட்டுடன் செல்லும் வீடியோ வெளியாகி வைரலானது. அந்த வகையில் நேற்று தனது மகன் படிக்கும் பள்ளிக்கு சென்றிருந்த அஜித்குமாரை அங்கிருந்த ஊழியர்கள் சிலர் தங்களது மொபைலின் தலயின் தலையை க்ளிக் செய்து இணையத்தில் அப்லோடிவிட்டனர்.
சும்மா விடுவார்களா அஜித் ரசிகர்கள். வழக்கம் போல இந்த புகைப்படத்தையும் ட்ரெண்டாக்கி அழகு பார்த்தனர். மேலும், விஸ்வாசம் படத்தில் அஜித்தின் கெட்டப் இதுவாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்கிறார்கள்.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
சாதரனமாக தலைக்கு சாயம் பூசாத அஜித்குமார். தற்போது மெரூன் மற்றும் டார்க் ப்ரவ்ன் என இரண்டு ஷேடுகளில் செம்ம ட்ரெண்டியாக தனது தலைக்கு சாயம் பூசி பட்டையை கிளப்புகிறார்.
அநேகமாக, விஸ்வாசம் படத்திற்காகத்தான் அஜித் இந்த சிகை அலங்காரத்திற்கு மாறியுள்ளார் என கூறப்படுகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் அட நம்ம தலயா இது..? நம்பவே முடியலையே.!! என்று தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்..!
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!