மாறு வேஷம் போட்டு மரியாதையை இழந்த DD..!! செம்மையா கலாய்க்கும் ரசிகர்கள்..!!


பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. சினிமா நடிகைகளுக்கு இணையான பிரபலத்தை பெற்றுள்ளார். தொலைகாட்சியில் இவர் தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்சிகளும் ரசியக்ர்களிடையே மிகவும் பிரபலம்.

பொதுவாகவே, பிரபலங்கள் என்றால் பொது வெளியில் சுதந்திரமாக சுற்ற முடியாது. மாறுவேடத்தில் தான் சுற்றுவார்கள். அவ்வளவு ஏன், நாம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே மாறுவேடம் போட்டுகொண்டு தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகளில் தன்னுடைய படங்கள் ரிலீசாகும் சமயத்தில் விசிட் அடித்து விட்டு வருகிறார். இதனை, விஜய், அஜித் உட்பட பல நடிகர்களும் பின்பற்றி வருகிறார்கள். எங்கே வருகிறார்கள்..?, எப்போது வருகிறார்கள்..? என்ற விஷயம் குறிப்பிட்ட நடிகர் மற்றும் அவருடைய உதவியாளர் தவிர வேறு யாருக்கும் தெரியாது.


தான் நடித்த திரைப்படம் ரசிகர்களிடம் இருக்கும் வரவேற்ப்பு என்ன..? எந்த காட்சிகள் அவர்களை கவர்ந்தது..? எது அவர்களுக்கு பிடிக்கவில்லை..? போன்ற விஷயங்களை நேரடியாக கவனித்து தெரிந்துகொள்ளவே இந்த ஏற்பாடு. ஆனால், நடிகைகள் நிலைமை படுமோஷம். ஒரு ஷாப்பிங் மால் செல்லவேண்டும் என்றாலும் செல்லமுடியாது. ஆனால், தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி மாறுவேடத்தில் பிரபல ஷாப்பிங் மால் ஒன்றிற்கு சென்றுள்ளார். ஆம், முகத்தை மறைக்கும் படி பர்தா அணிந்து கொண்டு ரசிகர்களிடம் இருந்து தப்பித்து ஷாப்பிங் செய்து வந்துள்ளார் DD.

இதனை பார்த்த ரசிகர்கள், மாறுவேஷத்துக்கு உண்டான மரியாதை போச்சே..! உங்களால..! என்று விவேக் பாணியில் கமென்ட் அடித்து வருகிறார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி