மெர்சல் திரைப்படத்தால் எத்தனை கோடி நஷ்டம் தெரியுமா..? வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!


மெர்சல் திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு நடுவே வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சக்கை போடு போட்டது. தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என பலரும் இதன் மூலம் கணிசமான லாபம் பார்த்தனர்.

மெர்சல் அளவிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் லாபம் கொடுத்த படம் இல்லை என அனைவரும் கூறினார்கள். இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் ஒருவர் மெர்சல் படத்தின் பட்ஜெட் 90 கோடி மட்டும் தான். ஆனால், இயக்குனர் அட்லி இதனை 130 கோடிக்கு இழுத்து சென்றுவிட்டார்.


படத்தை எடுக்கும் முன்பு ஒரு தொகையையும், பாதி படம் எடுத்து முடித்த பின்பு ஒரு தொகையும் கூறி தயாரிப்பாளரை திணறடித்துவிட்டார் அட்லி. இதனால், தயாரிப்பு தரப்புக்கு 15 முதல் 20 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

மெர்சல் படம் நஷ்டம் என படத்தை தயாரித்த நிறுவனமான தேனாண்டாள் ஸ்டூடியோஸ் லிமிடெட் எந்த தகவலையும் இதுவரை கூறவில்லை என்பது குறிப்பிடதக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி