நடிப்புக்காக பிரபல நடிகை இப்படி செய்துடாங்களே..? அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!


பிரேமம் படம் மூலம் பிரபலமானவர் தமிழ் பெண்ணான சாய் பல்லவி. மலையாளத்தை அடுத்து தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள சாய் பல்லவி தமிழ் படங்களில் தற்போது பிசியாக உள்ளார்.

இந்நிலையில் அவர் திரையுலகம் பற்றி கூறியிருப்பதாவது,

தாம்தூம் படத்தில் கங்கனா ரனாவத் தோழியாகவும், கஸ்தூரிமான் படத்தில் மீரா ஜாஸ்மின் தோழியாகவும் நடித்துள்ளேன். சினிமா நிரந்தர தொழில் இல்லை. அதிலும் ஹீரோயின்களின் காலம் 6 ஆண்டுகள் தான் என்றார் என் அப்பா.

சினிமா தொழில் நிரந்தரம் இல்லை என்பதால் படிப்பு தான் கை கொடுக்கும் என்று அப்பா நம்பினார்.


இதையடுத்து மருத்துவம் படிக்க என்னை ஜார்ஜியா அனுப்பி வைத்தார்.

ஜார்ஜியாவில் படித்துக் கொண்டிருந்தபோது பிரேமம் பட வாய்ப்பு கிடைத்தது. படிப்பு பாதிக்காமல் விடுமுறையில் மட்டும் நடிக்குமாறு என் பெற்றோர் தெரிவித்தனர்.

பிரேமம் படம் சூப்பர் ஹிட்டானது. சினிமாவில் முழு கவனம் செலுத்துவதால் டாக்டர் வேலையை செய்வது இல்லை. மருத்துவம் உயிர் சம்பந்தப்பட்டது. அதனால் சினிமாவில் நடித்துக் கொண்டே மருத்துவம் பார்ப்பது எனக்கு பிடிக்கவில்லை

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி