எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆர்யா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? வியப்பில் திரையுலகம்..!!


பிரபல நடிகர் ஆர்யா ஒரு பிரபல தொலைக்காட்சியில் திருமணத்திற்காக பெண் தேடுகிறார். இவருக்காக 16 பெண்கள் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். இந்த பெண்கள் ஆர்யாவை காதல் செய்வது போலும், ஆர்யாவின் அன்பிற்கு சண்டை போடுவது போலவும் இந்த நிகழ்ச்சியில் காண்பிக்கிறார்கள்.


இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் ஆர்யா தான் திருமணம் செய்ய விரும்புவதாகவும், தன்னை விரும்பும் பெண்களை ஒரு இணையத்தில் பதிவிடுமாறு கூறினார் ஆர்யா. அதைப்போலவே நிறைய பெண்கள் அவர் கூறிய இணையத்தில் அவர்களின் முழு விவரங்களை பதிவுசெய்துள்ளார்கள்.


அதில் ஆர்யாவிற்கு பிடித்த 16 பெண்களை மட்டும் அவர் தேர்ந்தெடுத்துள்ளார். இந்த விஷயங்களுக்கெல்லாம் காரணம் கலர்ஸ் டிவி தானாம். அவர்களின் யோசனை போல் தான் ஆர்யா இப்படி ஒரு விளம்பரம் செய்து பெண் தேடும் படலத்தை ஆரம்பித்துள்ளார்.


ஆர்யா எப்போதும் படத்திற்கு 2 மாதங்கள் கால் சீட் கொடுப்பாராம். அவ்வாறு கொடுக்கும் போது 2 கோடியில் இருந்து 3 கோடி வரை சம்பளம் வாங்குவாராம். ஆனால் இந்த நிகழ்ச்சிக்காக ஆர்யா 8 கோடியில் இருந்து 10 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி