வைரலாகியது பிரபல நடிகரின் குட்டிக் குழந்தையின் மாஸ் புகைப்படம்..!! குஷியில் ரசிகர்கள்..!!


தமிழ் சினிமாவில் நாயகனாகவும், துணை நடிகர், வில்லன் என எந்தவொரு கதாபாத்திரமாக இருந்தாலும் துணிந்து ஏற்று நடிப்பவர்கள் ஒரு சிலரே, அதில் பாபி சிம்ஹாவும் ஒருவர்.

இவர் கடந்த 2016-ம் ஆண்டு நடிகை ரேஷ்மி மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் பிரிய உள்ளதாக வதந்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தன.


ஆனால் அவை உண்மை இல்லை, நாங்கள் மகிழ்ச்சியாக தான் உள்ளோம் என ரேஷ்மியும் பாபி சிம்ஹாவும் விளக்கம் அளித்து இருந்தனர், தற்போது ரேஷ்மி மேனனும் அவரது பெண் குழந்தை முத்ரா சிம்ஹாவும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, பலரும் குழந்தை கியூட்டாக உள்ளது என கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி