ஆடையால் மானத்தை காற்றில் பறக்க விட்ட நடிகை..!! முகம் சுளித்த பாலிவுட் பிரபலங்கள்..!!


விருது விழாவுக்கு தீபிகா படுகோனே அணிந்து வந்த உடை ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. ஹலோ ஹால் ஆஃப் ஃபேம் விருதுகள் 2018 நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். ஷாருக்கான் தனது மனைவி கவுரி கானுடன் வந்திருந்தார். பாலிவுட்டின் வெற்றி நாயகியான தீபிகா படுகோனேவின் உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.


2017ம் ஆண்டின் சிறந்த என்டர்டெய்னர் விருது தீபிகாவுக்கு கிடைத்தது. இதே விருது ஆண்கள் பிரிவில் தீபிகாவின் காதலரான நடிகர் ரன்வீர் சிங்கிற்கு கிடைத்தது. தீபிகா வெள்ளை நிற கவுன் அணிந்து விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அந்த கவுனின் முன் பக்கத்தை பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.


தீபிகா இந்த கவுன் அழகாக உள்ளது ஆனால் கொஞ்சம் முன்னழகை மறைத்தது போன்று இருந்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த உடை முன்னதாக ஹாலிவுட் நடிகர் வின் டீசல் மும்பை வந்தபோது நடந்த நிகழ்ச்சியில் தீபிகா அணிந்திருந்த உடையுடன் ஒப்பிட்டால் இந்த கவுன் எவ்வளவோ பரவாயில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி