டெல்லி முதல்வர் ட்வீட் போட்ட முதல் தமிழ் ஆவணப் படம்..!! எப்படி தெரியுமா..?


அந்தப் படம் கொலை விளையும் நிலம். தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களின் விவசாயிகள் படும் பாடுகளை, விவசாயம் பொய்த்ததால் அந்த மாவட்டங்களில் விவசாயிகள் தூக்கில் தொங்கியதையும் பூச்சி மருந்து குடித்து இறந்த அவலங்களையும் படம்பிடித்துள்ளது இந்த கொலை விளையும் நிலம். பத்திரிகையாளர் ராஜிவ் காந்தியின் உருவாக்கம் இது.

கடந்த ஆண்டு உருவான இந்தப் படத்தை, இயக்குநர் சுப்பிரமணிய சிவாவின் மூலம் அறிந்து, பாதிக்கப்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு 125 விவசாயக் குடும்பங்களுக்கு தலா ரூ 50 ஆயிரம் உதவித் தொகை வழங்கியது நினைவிருக்கலாம்.

இந்த ஆவணப்படத்தை நேற்று முறைப்படி சென்னையில் வெளியிட்டார் ராஜிவ் காந்தி. தமிழகத் தலைவர்கள் க திருநாவுக்கரசு, பாலபாரதி, செல்வப் பெருந்தகை, போராளி வளர்மதி, விவசாய சங்கத் தலைவர் பிஆர் பாண்டியன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர் இந்த நிகழ்ச்சியில்.

இந்தப் படம் குறித்து தகவல் அறிந்து, அதை இணையதளத்தில் பார்த்துள்ளார் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழக விவசாயிகளின் தற்கொலைகளைச் சொல்லும் ஆவணப் படம் கொலை விளையும் நிலம். பத்திரிகையாளர் க ராஜிவ் காந்தி இயக்கியுள்ள இந்தப் படம் தமிழ் நாட்டு விவசாயிகளின் இப்போதைய நிலையை தெளிவாகக் காட்டுகிறது,’ என்று குறிப்பிட்டுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி