மகள் விளையாடுவதை கூட்டத்தில் ஒருவராக பார்த்து ரசிக்கும் விஜய்..!! வைரல் புகைப்படம்..!!


தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களின் பட்டியலில் நடிகர் விஜய்யிக்கும் மிக பெரிய இடம் உண்டு. இவர் கடைசியாக நடித்த மெர்சல் படம் 100 நாட்களை கடந்து திரையில் வெற்றி பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து, இவர் அடுத்து எ.ஆர். முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இவருக்கு இரு குழந்தைகள் உண்டு மகன் பெயர் சஞ்சய் மற்றும் மகள் பெயர் திவ்யா. இவரது மகன் சஞ்சய்யிக்கு 17 வயது ஆகிவிட்டது, மகனை வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் நடனம் ஆட வைத்து திரையில் அறிமுகம் செய்திருந்தார் விஜய்.


அதைப்போலவே மகளை தெறி படத்தில் கடைசி காட்சியில் அறிமுகம் செய்து வைத்திருந்தார். அதன் பிறகு மகன் மகளை எங்கும் பெரிதாக மீடியா இருக்கும் இடத்திற்கு அழைத்து வரவில்லை விஜய்.

இந்த நிலையில் அண்மையில் மகள் ஷுட்டில் கார்க் விளையாடும் புகைப்படம் வைரலாக பரவியது. மகள் விளையாடும்போது தந்தையாகிய விஜய்யும் அங்கு தான் இருந்திருக்கிறார். கூட்டத்தில் பலருள் ஒருவராக அமர்ந்திருந்து மகள் விளையாடுவதை கண்டு ரசித்திருக்கிறார் விஜய். இந்த புகைப்படம் தற்போது விரலாக பரவி வருகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி